கடைசியாக இற்றையாக்கப்பட்டது: January 21, 2022
நீர் எமது வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் உமது பெயரையும் (மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், அஞ்சல் முகவரி போன்ற) தொடர்பு விபரங்களையும் சேகரிக்கக்கூடிய சில நிகழ்வுகள் உள்ளன. நாம் அனுமதியின்றி அத்தகவல்களைச் சேகரிக்கவோ இணையவழி விளம்பரத்தில் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்தவோ மாட்டோம். நீர் தானாக முன்வந்து உமது பெயரையும் தொடர்பு விபரங்களையும் வழங்கக்கூடியதற்கான உதாரணங்களாவன:
கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பது: பயனரின் கோரிக்கைக்கு பதிலளிக்க மட்டுமே நாம் மின்னஞ்சல் முகவரி, ஏனைய தொடர்புத் தகவல்கள் உட்பட்ட தகவல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். உதாரணமாக, “எம்மைத் தொடர்பு கொள்க” எனும் தொடுப்பைச் சொடுக்குவது, ஒரு கேள்வி அல்லது கருத்தைச் சமர்ப்பித்தால் உமக்கு ஒரு பதிலை அனுப்ப நாம் உமது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றைச் சேகரிப்போம்.
நீர் எமது செய்திமடல் பட்டியலிற் சேர்க்குமாறு தானாக முன்வந்து கேட்டால், நாம் எமது மின்னஞ்சல் செய்திமடலை உமக்கு அனுப்ப உமது மின்னஞ்சல் முகவரியைச் சேகரிப்போம்.
மேலே குறிப்பிட்டுள்ளவாறு உமது தொடர்புத் தகவல்களை உள்ளிடுவதன் மூலம், நீர் Choreograph உமது கோரிக்கை தொடர்பாக உம்மைத் தொடர்பு கொள்ள அத்தகவல்களைப் பயன்படுத்த இசைகிறீர். இவ்விசைவு இந்த வழியில் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான எமது சட்ட அடிப்படையாகும்.
நீர் எந்த நேரத்திலும் உமது இசைவைத் திரும்பப் பெற முடிவு செய்தால், எமது சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களில் அல்லது செய்திமடல்களில் இருந்து உம்மை நீக்க வேண்டும் அல்லது எமது தரவுத்தளத்திலிருந்து சந்தா விலக வேண்டும் என்று விரும்பினால் உலகளாவிய அந்தரங்க அறிவிப்பின் எம்மைத் தொடர்பு கொள்க எனும் பிரிவிலுள்ள விபரங்களைப் பயன்படுத்தி நீர் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். நீர் உமது பெயர், மின்னஞ்சல் முகவரி, நீர் கோரும் மாற்றங்கள் என்பவற்றைப் பற்றிய தெளிவான வழிமுறைகளை உள்ளடக்கியாக வேண்டும். நீர் மின்னஞ்சலின் கீழே உள்ள “சந்தா விலகு” எனும் தொடுப்பைச் சொடுக்குவதன் மூலம் மின்னஞ்சல் செய்திமடல்களிலிருந்தும் சந்தா விலகலாம்.
Choreograph என்பது உமது தனிப்பட்ட தரவுகளுக்கு (இப்பதம் அல்லது ஒத்த பதம் பொருந்தக்கூடிய சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளவாறு) பொறுப்பான ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளர் ஆகும்.
எதிர்கால வருகைகளில் நீர் விரும்பக்கூடிய உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் நாம் உமது வலைத்தள அனுபவத்தை மேம்படுத்த இத்தகவல்களில் சிலவற்றை அல்லது அனைத்தையும் பயன்படுத்துகிறோம். இந்த வகையான செயலாக்கத்துக்கான எமது சட்டபூர்வமான அடிப்படை என்னவென்றால், எமது வலைத்தளத்தைப் பற்றிய உமது அனுபவத்தை விளங்கிக் கொள்ளவும் மேம்படுத்தவும் எமக்கு நியாயமான ஆர்வம் இருக்கிறது என்பதாகும்.
ஞாபகிகளையும் மேலே உள்ள தகவல்களையும் பயன்படுத்துவதை நீர் ஏற்காவிடின், நீர் உமது உலாவி அமைப்புகளின் மூலம் அவற்றின் பயன்பாட்டைத் தடுக்கலாம் அல்லது HERE விலகத் தெரிவு செய்யலாம். ஞாபகிகளை ஏற்காதிருக்கத் தெரிவு செய்வதன் மூலம், சில வலைத்தளக் கூறுகள் நாம் நினைத்தவாறு செயற்படாமற் போகலாம்.
குக்கீகள் என்றால் என்ன?
ஞாபகிகள் என்பவை நீர் எமது வலைத்தளத்துக்கு வரும் போது நாம் உமது கணினிக்கு அல்லது சாதனத்துக்குத் தரவிறக்கும் சிறிய அளவிலான தகவல்களைக் கொண்ட உரைக் கோப்புகளாகும். நாம் அடுத்தடுத்த வருகைகளில் இந்த ஞாபகிகளை அடையாளம் காண முடியும், அவை எமக்கு உம்மை நினைவிற் கொள்ள வழி செய்கின்றன. ஞாபகிகள் பல வடிவங்களில் வருகின்றன, நாம் கீழே இத்தளத்திற் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஞாபகிகளின் வகைகளையும் பகுப்புகளையும் பற்றிய மேலும் விபரங்களை வழங்குகிறோம்.
முதல் தரப்பு ஞாபகிகளும் மூன்றாம் தரப்பு ஞாபகிகளும் – ஞாபகி முதல் தரப்பா அல்லது மூன்றாம் தரப்பா என்பது அது ஞாபகியை வைக்கும் ஆட்களத்தைக் குறிக்கிறது. முதல் தரப்பு ஞாபகிகள் என்பவை பயனர் பார்வையிடும் ஒரு வலைத்தளத்தினால், அஃதாவது உலாவிச் சாளரத்தில் காட்டப்படும் வலைத்தளத்தின் மூலம் அமைக்கப்பட்டவை ஆகும். உதாரணமாக https://www.choreograph.com. மூன்றாம் தரப்பு ஞாபகிகள் என்பவை பயனர் பார்வையிடும் வலைத்தளத்தைத் தவிர வேறொரு ஆட்களத்தால் அமைக்கப்படும் ஞாபகிகள் ஆகும். ஒரு பயனர் ஒரு வலைத்தளத்துக்குச் சென்று மற்றொரு நிறுவனம் அந்த வலைத்தளத்தின் மூலம் ஒரு ஞாபகியை அமைத்தால், அது ஒரு மூன்றாம் தரப்பு ஞாபகியாக இருக்கும்.
அமர்வு ஞாபகிகள் – இந்த ஞாபகிகள் உலாவி அமர்வின் போது ஒரு பயனரின் செயல்களை வலைத்தள இயக்கிகளுடன் தொடுக்க வழி செய்கின்றன. ஒரு உலாவி அமர்வு ஒரு பயனர் ஒரு உலாவிச் சாளரத்தைத் திறக்கும் போது தொடங்கி அவர் உலாவிச் சாளரத்தை மூடியதும் முடிவடைகிறது. அமர்வு ஞாபகிகள் தற்காலிகமாக உருவாக்கப்படுகின்றன. நீர் உலாவியை மூடியதும், எல்லா அமர்வு ஞாபகிகளும் நீக்கப்படும்.
குக்கீகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?
ஞாபகிகள் கீழே அமைக்கப்பட்டுள்ள ஒரு அல்லது பல வகைகளில் அடங்குகின்றன. இந்த வலைத்தளம் அவ்வப்போது எல்லா வகைகளிலும் அடங்கும் ஞாபகிகளைப் பயன்படுத்துகிறது. மேலும், நீர் ஏனைய வலைத்தளங்களுக்குச் சென்ற போது மூன்றாம் தரப்பினரால் உமது கணினியில் வைக்கப்பட்ட இலக்கு வைக்கும் ஞாபகிகளிலிருந்தும் நாம் தரவுகளைப் பயன்படுத்துகிறோம்.
குக்கீகளை நான் எப்படி நீக்குவது?
நீர் ஏற்கனவே உமது கணினியில் அல்லது சாதனத்தில் இருக்கும் ஞாபகிகளை நீக்க விரும்பினால், கீழே உள்ள விபரங்களைப் பார்க்க. மேலதிக விபரம் ஞாபகி விருப்ப மையம் என்பதில் கிடைக்கப் பெறுகிறது, அது இத்தளத்திற் பயன்படுத்தப்படும் எல்லா ஞாபகிகளையும் காட்டும். நீர் எதிர்காலத்தில் உமது கணினியில் ஞாபகிகள் சேமிக்கப்படுவதை நிறுத்த விரும்பினால், உமது உலாவிப் பொருட்பட்டியிலுள்ள “உதவி” என்பதைச் சொடுக்குவதன் மூலம் உமது உலாவி உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பார்க்க. ஞாபகிகளைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் http://www.allaboutcookies.org/ இல் கிடைக்கப் பெறுவதுடன் நீர் ஆர்வ அடிப்படையிலான விளம்பரத்துக்காக ஞாபகிகளைப் பயன்படுத்துவதைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்www.youronlinechoices.com அல்லது http://optout.networkadvertising.org/?c=1.
எமது ஞாபகிகளை நீக்குவதன் மூலமோ அல்லது எதிர்கால ஞாபகிகளை முடக்குவதன் மூலமோ நீர் எமது வலைத்தளத்தின் குறிப்பான பகுதிகளை அல்லது கூறுகளை அணுக முடியாமற் போகலாம். நீர் ஞாபகிகளை நீக்கினாலோ, ஒரு புதிய உலாவியை நிறுவினாலோ அல்லது ஒரு புதிய கணினியைப் பெற்றாலோ, இந்தத் தளத்துக்கு மீண்டும் வந்து விலகல் ஞாபகியை மீளமைக்க வேண்டியிருக்கும்.
குக்கீகளின் பின்வரும் வகைகளைப் பயன்படுத்துகிறோம்:
கண்டிப்பாக தேவையான குக்கீகள்
இந்த ஞாபகிகள் வலைத்தளம் செயற்படத் தேவையானவையும் எமது தொகுதியில் செயலிழக்கச் செய்ய முடியாதவையும் ஆகும். அவை பொதுவாக உமது அந்தரங்கம் தொடர்பான விருப்பங்களை அமைத்தல், நுழை பதிதல் அல்லது படிவங்களை நிரப்புதல் போன்ற சேவைகளுக்கான கோரிக்கைக்கு நீர் செய்யும் செயல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மட்டுமே அமைக்கப்படும்.
நீர் இந்த ஞாபகிகளைத் தடுக்குமாறு அல்லது உமக்கு எச்சரிக்கை செய்யுமாறு உமது உலாவியை அமைக்கலாம், ஆனால் அப்போது தளத்தின் சில பகுதிகள் வேலை செய்யா. இந்த ஞாபகிகள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எத்தகவல்களையும் சேமித்து வைப்பதில்லை.
செயல்திறன் குக்கீகள்
இந்த ஞாபகிகள் நாம் எமது தளத்தின் வினைத்திறனை அளவிடவும் மேம்படுத்தவும் கூடியவாறு வருகைகளையும் போக்குவரத்து மூலங்களையும் கணக்கிட வழி செய்கின்றன. அவை எப்பக்கங்கள் ஆகவும் பிரபலமானவை என்பதையும் ஆகவும் பிரபலமற்றவை என்பதையும் அறிந்து கொள்ளவும், அவையோர் எவ்வாறு தளத்தில் நகர்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் எமக்கு உதவுகின்றன.
இந்த ஞாபகிகள் சேகரிக்கும் அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன, எனவே அவை அநாமதேயமாக இருக்கும். நீர் இந்த ஞாபகிகளை அனுமதிக்காவிடின், நீர் எப்போது எமது தளத்துக்கு வந்தீர் என்பதை நாம் அறியாததுடன் எம்மால் அதன் வினைத்திறனைக் கண்காணிக்க முடியாமற் போகும். இத்தகைய ஞாபகிகளில் Google Analytics வழங்கும் மூன்றாம் தரப்பு ஞாபகிகளும் இருக்கலாம்.
செயல்பாட்டு குக்கீகள்
இந்த ஞாபகிகள் வலைத்தளத்துக்கு உயர் தொழிற்பாட்டையும் தனிப்பயனாக்கத்தையும் வழங்க வழி செய்கின்றன. அவை எம்மாலோ நாம் எமது பக்கஙகளில் அதன் சேவைகளைச் சேர்த்துள்ள மூன்றாம் தரப்பு வழங்குநர்களாலோ அமைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, அவை ஒரு காணொளியைப் பார்ப்பது அல்லது வலைப்பதிவில் கருத்துத் தெரிவிப்பது போன்ற நீர் கேட்ட சேவைகளை வழங்க உதவியாகப் பயன்படுத்தப்படலாம். இந்த ஞாபகிகள் சேகரிக்கும் தகவல் அநாமதேயமாக்கப்படலாம், அவை மற்ற வலைத்தளங்களில் உமது உலாவற் செயற்பாட்டைத் தடமறிய முடியாது.
நீர் இந்த ஞாபகிகளை அனுமதிக்காவிடின், இந்தச் சேவைகளில் சில அல்லது அனைத்துமே சரியாகத் தொழிற்படாமற் போகலாம்.
குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தரவு மூலம் இந்தத் தளத்தைப் பயன்படுத்துதல்
நாம் சிறார்களின் அந்தரங்கம் தொடர்பாக உணர்வுபூர்வமாக இருக்கிறோம். எமது வலைத்தளம் 13 வயதுக்குட்பட்ட சிறார்களுக்காக உருவாக்கப்படவோ நோக்கங் கொள்ளப்படவோ இல்லை. நாம் சிறார்களிடம் எமது வலைத்தளத்தினூடாகத் தம்மைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டாம் என்று குறிப்பாகக் கேட்டுக் கொள்கிறோம். நீர் உமது பிள்ளை இந்த வகையான தகவல்களை வழங்கியிருப்பதாக நம்பி அவற்றை எமது தரவுத்தளத்திலிருந்து நீக்க விரும்பினால், நீர் DPO@choreograph.com இல் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். நாம் 13 இற்குக் குறைவான வயதுள்ள ஒரு பிள்ளையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளோமென அறிந்தால், நாம் அவற்றை நீக்கி விடுவோம்.
மூன்றாம் தரப்பு தளங்களுக்கான இணைப்புகள்
எமது வலைத்தளத்திலிருந்து மற்றொரு வலைத்தளத்துக்கான தொடுப்பு துணை நிறுவனங்களுக்கான அல்லது வலைத்தளங்களுக்கான எமது ஒப்புதலைக் குறிக்காததுடன் நாம் தொடுக்கும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை நாம் கட்டுப்படுத்துவதோ அவற்றின் உள்ளடக்கத்துக்கோ அந்தரங்கக் கொள்கைகளுக்கோ பொறுப்பாவதோ கிடையாது. நீர் வேறொரு வலைத்தளத்துக்கான ஒரு தொடுப்பைப் பின்தொடர்ந்தவுடன், Choreograph அந்தரங்க அறிவிப்பு அதற்கு மேலும் பொருந்தாது. நீர் செல்லும் எந்த வலைத்தளத்தின் அந்தரங்கக் கொள்கையையும் எப்போதும் வாசித்துக் கொள்வது முக்கியம்.